ஒன்றிணைந்த மனங்கள்

ஒன்றிணைந்த மனங்களுமே
ஒற்றுமையாய்ச் செயல்பட்டால்
நன்றாகும் இவ்வுலகும்
நன்னெறிகள் பெருகிவிடும் !


சண்டைகளும் வாராது
சந்ததியும் உயர்வடையும்
பண்பாடும் மாறாது
பாரம்பரியம் சொல்லிடுமே !


சாதிமத வேறுபாடின்றி
சகோதரத்துவம் வலியுறுத்தச்
சமுதாயம் சீர்பெறவே
சமத்துவமாய் ஒன்றிணைவீர் !!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-Mar-17, 10:10 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 91

மேலே