அழகின் ஊரே

சாதல் காலம் என் சாதல் காலம்
உன் விழிநோக்கும் நொடியே நேரும்

மண்ணில் வீழும் மழைத்துளிகள் யாவும்
உன் உருகொண்டே உலகைச் சேரும்

செந்தீம் அழகே செவ் விழியில் வீழ்ந்தேன்
சொர்க்கம் என்றே நான் சொக்கி வாழ்ந்தேன்

பாராதே பாராதே உடல் உழன்றே வீழும்
சொல்லூடே கள் நிறைந்தே வீழும்

ஆறே ஆறே இவள் விழிகள் ஆறே
இவள் அன்போடும் அழகின் ஊரே

அழும்பிள்ளை மனமா அவிழ் பூவின் மணமா
அகமாடும் இவள் நினைவோ கனமா

மட்டின் சுவையா அம்மாலை வெயிலா
மழையின் எழிலா உடன்நகரும் நிழலா

பாராதே பாராதே உடல் உழன்றே வீழும்
சொல்லூடே கள் நிறைந்தே வீழும்.

தளிர்போல் இதழோ பிறை
மதிபோல் நுதலோ

கானல் இதமோ கவின்
கவிதை முகமோ

ஆடித்திங்கள் அசர வைக்கும் கால்தான்
அழகின் முன்னே எதிர்த்து நிற்பதார் தான்

தேன்குரலால் தேகம் சுட்டு விடு உன்
பூங்குழலால் என்னைப் போர்த்தி விடு.

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (6-Mar-17, 6:02 am)
Tanglish : azhakin OORE
பார்வை : 102

மேலே