நரகம்

பொதுவாக நரகத்தை பற்றி வெளிவரும் கருத்துகள் மற்றும் படங்கள் எல்லாம் மனிதனை பயம் காட்ட உருவாக்கி உள்ள கற்பனை என்று பல பேர் கூறுகிறார்கள்.

ஒரு விதத்தில் பார்த்தால் இதுபோல் கற்பனையை உருவாக்குபவர்களுக்கு என்ன லாபமும் இல்லை. எனவே அதில் உண்மை இருக்க வாய்ப்பு இருக்கிறது.

மரணம் என்பது நிச்சயமாக அனைத்து உயிரினங்களுக்கும் வரும். அதை யாராலும் தடுக்க முடியாது. நாளை என்பது வராமல் போகலாம். மரணம் நமக்கு வந்தவுடன் மன்னிப்பு கதவுகள் மூடப்படுகிறது. அதனால் நன்மை செய்வதற்கு யோசிக்காதீர்கள்.

நரகத்தை பற்றி இந்து மதத்தில் கருட புராணம் என்னும் நூல் தெளிவாக நரகத்தில் என்னென்ன தண்டனைகள் வழங்கப்படுகிறது என்று கூறுகிறது. இதை பற்றி நாம் அந்நியன் திரைப்படத்தில் பார்த்திருப்போம்.

சரி நரகத்தை பற்றி கிறிஸ்துவ மதம் என்ன கூறுகிறது, "உங்கள் கண்கள் உங்களை பாவத்தில் விழ செய்தால் அதை பிடுங்கி எறிந்து விடுங்கள். நீங்கள் கண்ணுடையவராய் நரகத்தில் விழுவதை விட கண் இல்லாதவராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது" என்று கூறுகிறது.

இஸ்லாம் மதத்தில் "நரகத்தில் குற்றவாளிகள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு தண்டனை குறைக்கப்பட மாட்டாது. அவர்கள் தமக்கு தாமே அநியாயம் செய்துக்கொண்டவர்களே" என்று கூறுகிறது.

இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் பாவம் செய்பவர்கள் கண்டிப்பாக நரகத்திற்கு அனுப்ப படுவார்கள், அவர்களுக்கு தண்டனைகள் ஒரு பொழுதும் குறைக்க படமாட்டாது என்கிறது.

நரகத்தில் குறைந்த பட்ச தண்டனை "நெருப்பாலான காலணிகள் அணிய வேண்டும். அதிலுள்ள வெப்பத்தால் அவரது மூளை கொதிக்கும் வரை அனுபவிக்கவேண்டும். நரகத்தில் பலவிதமான தண்டனைகள் வழங்க படுகிறது அவற்றுள் முக்கியமானது 28 தண்டனைகள் தான்.

சில தண்டனைகள்:

அநித்தாமிஸ்ரா நரகம்: கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். இவர்கள் கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ விழுந்து தவிக்க வேண்டும்.

மகா ரெளரவ நரகம்: பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தல். குரு என்கிற மிருகம் முட்டி மோதி அவர்களை ரணகளப்படுத்தி கொண்டுயிருக்கும்.

அந்தகூபம்: உயிர்களை சித்திரவதை செய்தல் கொலை செய்தல். மாடுகள் மிதித்து துன்புறுத்த படுவார்கள்.

நரகத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி நன்மையை அதிகமாக செய்வது தான்.

சிலர் நரகம் இல்லையென்று கூறுகிறார்கள். அவர்கள் கூறுவத்திலும் நியாயம் இருக்கிறது. இதுவரை உயிரோடு இருக்கும்போது நரகத்தை யாரும் நேரில் பார்த்து இல்லை. அப்படி நேரில் பார்த்தால் எல்லோரும் பயந்து திருந்திவிடுவார்கள்.

நரகம் இருக்கிறது, இல்லை என்று யாராலும் கூறமுடியாது. ஒருவேளை இருந்தால் அது இப்படி தான் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

எழுதியவர் : சரவணன் (6-Mar-17, 3:58 pm)
சேர்த்தது : சரவணன்
Tanglish : narakam
பார்வை : 611

சிறந்த கட்டுரைகள்

மேலே