பார் நிலவே பார்

பார் நிலவே பார்
நீ நீந்தும் வானை நிமிர்ந்து பாராத நெஞ்சங்களை
பார் நிலவே பார் !

கவிதை என்பார் கற்பனை என்பார் காதல் என்பார்
அமுது பொழியும் உன் அழகினை பாராத நெஞ்சங்களை
பார் நிலவே பார் !

நீ வாராத ஓர் இரவு இருள் நாள் என்பார்
முகிழ்த்து மூன்றாம் பிறையில் நீசிரிக்கும் அழகை ரசிக்காத நெஞ்சங்களை
பார் நிலவே பார் !

நிலவை பெண்ணுக்கு உவமை என்பார்
முழு நிலவாய் நீ வரும் போது கவி எழுதா வறுமை நெஞ்சங்களை
பார் நிலவே பார் !

விண்மீன் கூட்டங்களுக்கிடையில் ஒளிரும் வெண்மீன் நீ
நின்னைப் பாடாது பெண்ணைப் பாடும் ஏழை நெஞ்சங்களை
பார் நிலவே பார் !
நீயும் ஒரு முறை பார் நிலவே பார்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Mar-17, 8:36 am)
Tanglish : paar nilave paar
பார்வை : 85

மேலே