மகளிர் தின வாழ்த்து பாடல்
வானளவை யார் அறிவார்
பெண்கண்கள் விண்மீன்கள்
அவள் பெருமை யார் அறிவார்
அவள் பொறுமை யார் அறிவார்
அவளே இனியவள்
உலகில் சிறந்தவள்
அவளில்லாமல் யாரும் பிறப்பதில்லை
அவள் அன்பில்லாமல் உலகில் வேறெதுவுமில்லை
இறைவன் உருவில் வாழ்வது பெண் இனம் தான்
தாயின் உருவில் இருப்பது பெண்டிர் தான்
தியாகத்தின் வடிவம் அது பெண் குணம் தான்
நமை போல் அவளும் ஒரு பிறவி தான்
அதை உணர்ந்தாள் எவரும் மனிதர் தான்
வெற்றிக்கு முன்னாள் இருப்பது பெண்கள்
நெஞ்சில் நமை நாளும் சுமப்பது பெண்கள்
உயிர்வலியை தாங்கும் கருவினில் நமை சுமப்பாள்
மறுபிறவி எடுத்தேனும் உயிரை அவள் கொடுப்பாள்
அவளே இனியவள் உலகில் சிறந்தவள்
உன் பசியை அறிந்து உணவிடுவதும் பெண்கள் தான்
தினமும் அவளே முதலில் துயில் எழுவாள்
நமை பேணும் பணியை முதலில் செய்திடுவாள்
வழி மேல் விழி வைத்து காத்திருப்பாள் தினம்தான்
நிசியை மறந்து காத்திருப்பாள் அவள் தான்
காப்போம் அவளின் உரிமைகளை
என்றும் உணர்வோம் அவளின் பெருமைகளை
உயிர் தாங்கும் வேர்கள் என்றென்றும் அது பெண்கள்
நிலவை போல் அவள் ஒருவள்தான்...........