மகளிர் தினம்

உலகில் வாழும் பெண்கள் அனைவருக்குமே பங்குனி மாதமென்பது சிறப்பான மாதமாகும்.காரணம் பங்குனி 8 உலகமெங்கிலும் மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது.

வருடத்திலுள்ள 365 நாட்களில் இன்று மட்டுமா மகளிருக்கான நாள் என்று முணுமுணுப்பவர்களுக்கிடையில் பெண்களின் உரிமைகளுக்காய் குரல் கொடுப்பவர்களும் உள்ளார்கள்.

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களின் பாவனையால் மகளிர் தினமென்பது பலரால் பேசப்படுகின்ற போதும் நம்மில் பலருக்கு மகளிர் தினமென்பதே தெரிவதில்லை.பொது விடயங்களை அறிந்து கொள்ளாமாலே சிலர் தங்கள் காலத்தைக் கடத்திவிடுகின்றனர்.ஆனாலும் மாறி வருகின்ற இந்த நவீன யுகத்தில் தேடலில்லாமல் கண்மூடித்தனமானதொரு வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது.பல தரப்பட்ட விடயங்களையும் தேடி அறிந்து அதில் வேண்டியதை எடுத்து வேண்டாததை தூரப்போடுவோம்.

இந்த மகளிர் தினமும் அப்படித்தான்.ஆண்களாக இருக்கட்டும்,பெண்களாக இருக்கட்டும் மகளிர் தினமென்பது அவசியம்தானா என கேட்பவர்களும் உள்ளார்கள்.வருடத்தில் வருகின்ற இந்த ஒரு நாளிலாவது பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு குரல் கொடுப்பவர்களும் உள்ளார்கள்.

பெண்களுக்கெதிரான அடக்கு முறைகளும்,அச்சுறுத்தல்களும் உள்ள நிலையில் இன்றொரு நாள் அவசியமா?என்ற கேள்வியை விடுத்து,இந்த நாளை கொண்டாட்டமாக பார்க்காமல் பெண்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் நாளாக இன்றைய சந்ததிக்கும்,வரும் சந்ததிக்கும் இதையொரு போராட்ட நாளாக அடையாளப்படுத்துவோம்.

இது நமக்கான நாள்.இன்றைய தினத்திலாவது உறங்கிக் கிடக்கும் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.மகளிர் தினத்தில் மட்டுமில்லாது அனைத்து தினங்களிலும் நமக்கானதொரு அங்கீகாரத்தைப் பெற்றிட மாபெரும் சக்தியாக உருவாகுவோம்.

வீட்டிலும் வெளியிலும் பல்வேறு இன்னல்களுக்கிடையில் தமக்கானதொரு அடையாளத்தைப் பெற்றிட போராடிக்கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும்

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்....

எழுதியவர் : அன்புடன் சகி (8-Mar-17, 7:25 pm)
Tanglish : makalir thinam
பார்வை : 4089

சிறந்த கட்டுரைகள்

மேலே