மீத்தேன் ஏன்

மீத்தேன் எடுத்தால் மண்வளம் குறையும்
கருஞ்சாயம் படர்ந்து விவசாயம் அழியும்
வளமான நிலமெல்லாம் தரிசாகும்
சுற்றுசூழலும் கேள்வி குறியாகும்
வேண்டாம் வேண்டாம் வியாபாரம் வேண்டாம்
போதும் போதும் இருப்பதே போதும்
கைவிடு கைவிடு திட்டத்தை
மக்கள் சக்தி வெல்லும் கொட்டத்தை
வளமெல்லாம் சுரண்டி எடுக்கின்றதேனோ
நிலையான வாழ்வை அழிக்கவேனோ
பூமியில் பள்ளத்தை போடாதே
இயற்க்கை பேரிடரை தானே அழைக்காதே
வெப்பம் பெருகி எம்குலம் சாகும்
ஓசோன்ல ஓட்டை அதிகம் தொடரும் சூழலை நீயே வகுக்காதே
இயற்க்கை சூழலை செயற்கையாய் மாற்றாதே
காற்று மாசு ஆயுளை குறைக்கும்
நாளை வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும்
ஏழை ஏழையாய் ஆகின்றான் சாமி
விவசாய பூமியை அளிக்கின்ற கூட்டம்
நாங்கள் வறுமை கோட்டில் நிற்கின்ற கூட்டம்
வாழ்க்கை தரம் உயரவில்லையே
விலைவாசி குறையவில்லையே
சட்டம் திட்டம் எல்லாமே ஓட்டு
பிட்சை கேட்டு வைக்கிறாய் வேட்டு
மக்களாட்சியை நீயும் உடைக்காதே
மக்கள் புரட்சியை தூண்டாதே
விட்டுவிடு அழிவிலிருந்து காத்துவிடு

எழுதியவர் : வீ ஆர் சதிஷ்குமாரன் 64 (8-Mar-17, 8:56 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 288

மேலே