பெரிய வேலைக்காரன்
பெரிய வேலைக்காரன்!
அங்கே, பெரிய வேலை, செய்து கொண்டிருந்தான் அவன்!
புண்ணிய நதியில், இறந்தவரின் அஸ்தி கரைப்பதும்,
இறந்தவருக்கு, காரியம் செய்வதுமாய் அவர்கள்!
அவர்கள், பாவங்களை, கரைத்துக் கொண்டிருந்தனர்,
சத்தத்தோடு!
அவன், பாவங்களை, பொறிக்கிக் கொண்டிருந்தான்,
மௌனத்தோடு!
அவர்கள், மூச்சு விட்டவர்களுக்காக, அழுது கொண்டிருந்தனர்!
அவனோ, நாளை சுவாசிப்பவர் களுக்காக, வீசி எறியப் பட்ட,
பிளாஸ்டிக் பை, மற்ற அசுத்தங்களை, பொறிக்கிக் கொண்டிருந்தான்,
அந்த, பெரிய வேலைக்காரன்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
