ஏன்
ஏன்?
ஏன் இந்த மனசு இப்படி போகுது,
ஏட்டிக்கு பூட்டியா இப்படி யோசிக்குது
எந்த கோட்டையை பிடிக்க போகுது
இப்படி பாழாய்ப் போன எண்ணத்தை பெருக்குது.
விதை ஒண்ணுபோட்டா, சுரை ஒண்ணு முளைக்குமா?
போட்டதை அறுவடை செய்யாம இருக்கத்தான் முடியுமா?
நமக்கும் மேலே ஒரு சக்தி, இருப்பதை மறக்கலாமா?
நம்ம இஸ்ட்டத்துக்கு, அடுத்தவரை ஆட்டிப் படைக்கலாமா?
நல்ல பேரோடு வாழ,கத்துக்கணும்,
நாம போறப்ப, நாலுபேரு நமக்காக வருந்தனும்!