அடர் கடல் ஆழம்
அலை அலை என அலைந்தே
கடல் கடல் என கடந்தே
வலை வலை விரித்தே
அடர் கடல் ஆழம் பார்த்தே
வலை விரித்தாய் நண்பா
வலை சுருக்கும் முன்
உன் வாழ் -கை சுருக்க வைத்தான்
லங்கை மான் எமன்
கையறு நிலையில் நாமும்
கையாலாக நிலையில் நீ வாக்களித்த அரசும் ..........
என்ன கனவெல்லாம் கண்டாய் நண்பா
காலையில் என்ன சாப்பிட்டாய்
காதல் ஏதும் செய்தாயோ
உன் மனமெல்லாம் என்ன எண்ணமோ
என்ன நிலையில் கண் மூடினாய்
ராஜன்.pv
உன் இதயம் எதை துடித்தன இறுதியாய்
நீயாகவே நினைத்து பார்க்கிறேன் ......................
நீளும் வாழ்வில்
மீன் முள் குத்திவிட கூடாதென
லாவகமாய் தின்னும் ராமன் கள்
எப்படி அறிவர்
மீன் உண்டது உன் இரத்தம் என்று ...........................................
ராஜன்.pv