ஊ --- ஊமைகளின் வரிகள்

ஊரினிலே வயல்வெளிகள் பசுமையோடு வளரட்டும்
ஊட்டச்சத்தும் இயற்கையாகத் தாருங்கள் பயிர்களுக்கும் .
ஊதக்காற்றும் அடித்தாலே மண்மீதில் மழைபொழியும்
ஊருணிகள் நிறைந்திடுமே நீருக்கும் பஞ்சமின்றி .!!!


ஊமைகளாய் இருந்திட்டால் விவசாயிக்கும் உலகினிலே
ஊதிடுவர் சங்கும்தான் ஒப்பாரி வைத்திடுவர்.
ஊழல்கள் நிறைந்ததிந்த அரசாங்கம் என்செய்வோம்
ஊக்கமாய் உழைத்திடவும் வழியில்லை ஈங்கின்றே !!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (13-Mar-17, 1:08 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 88

மேலே