சிவனருள்

நான் தினமும் செய்வேன் ஆராதனை

நான்முகனும் போற்றும் பரமானந்தன்,

சிவனின் தலைமேலே பிறையோடு நதி,

அவன் பொற்பாத அடிமேலென் மதி.

சிவனடியால் கண்டேன் பேரின்பமே,

மலரடியாள் பாகன் தந்த சிவஞானமே,

சிம்மன் செருக்கழித்து புகழ் கொண்ட சரபா,

பிரம்மன் தலைகொய்து மதம் அழித்த பரமா.

கண்டோம் உன்னை பெற்றோம் அருள்

என்றும் துதிபாடி உனை போற்றுவோம்,

பெற்றவன் உனை மறவோம் என்றும்,

உற்றவன் உனை என்றும் துதி பாடுவோம்,

உயிர் யாவுக்கும் பிணிநீக்கிடும் மருந்தீசா வைத்தீஸ்வரா,

உயர்ஞானத்தால் கொடும்பிணி நீக்கிடு காமேசா விஸ்வேஷ்வரா

அன்னமும் முடிகாணா ஒளிமழையாய் நின்ற லிங்கேசா பரமேஷ்வரா

இன்னா வினை ஒழித்து மதுரமாய் நின்ற அர்த்தநாரீஷ்வரா

உன்னை கானவே தவம் செய்தனர் அரும் முனிகளும்,

உனை துதித்தே பலம் பெற்றான் கொடும் ராவணும்

உன்னை போற்றியே போர் வென்றான் பெருமாலுமே,

உனை ஆராதித்தே உயிர் வாழ்வேன் நான் பரமேசா.

எழுதியது

சிவகவி ச.பா.சுப்புராசு (எ)ச.பா.துயஅரசு

எழுதியவர் : ச.பா.தூய அரசு (13-Mar-17, 11:04 pm)
சேர்த்தது : SP Subburaj
பார்வை : 38

மேலே