புரிந்து கொள்ளுங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
கவிதை
புரிந்து கொள்ளுங்கள் !
மனிதர்களே …
நீங்கள் எதையும்
யாரிடமும்
யாசிப்பதை விட்டுவிட்டு
யோசித்துப் பாருங்கள் !
வாழ்க்கையில்
வளம் இருந்தாலும்
யாரோ ஒருவரின்
புரிந்து கொள்ளலுக்காக
அன்புக்காக ஏங்கி
தவிக்கிறோம் !
ஏங்குவது தவிப்பது
இல்லையானால்
இல்லாதவன் கூட
எப்போதும் சிரிக்கிறான்.!
உங்கள் வாழ்வில்
யாரேனும்
புரிந்து கொள்ளலுக்காக
அன்புக்காக்
திரிந்து கொண்டு
இருப்பதை கண்டால்
நீங்கள்
வலியச் சென்று
அன்புடன்
பேசிப் பாருங்கள்!
நீங்களும் அவரும்
மகிழ்ச்சிக் கடலில்
மிதந்து செல்வீர்கள் !