அல்லவை தேய அறம் பெருகும்

அல்லவை தேய அறம் பெருகும் !
கவிதை : by பூ. சுப்ரமணியன்

பாவம் புண்ணியம் சொர்க்கம் நரகம்
பகுத்தறிவாதிக்கு இவைக் கேலிக்கூத்து
அறிந்து நடக்கும் மனிதனுக்கு
அல்லவை தேய அறம் பெருகும் !

பாவம், நீ செய்யும் தீமை
புண்ணியம், நீ செய்யும் நன்மை
புரிந்து நீ நடந்து கொண்டால்
அல்லவை தேய அறம் பெருகும் !

ஆன்மீக நூல்கள் தினமும் படி
இனிய அன்பர்களை தினமும் நாடு
ஆண்டவனை நினைத்து வாழ்
அல்லவை தேய அறம் பெருகும் !

ஆசையே துன்பத்திற்குக் காரணம்
அழகாக போதித்தான் புத்தன்
ஆசைக்கு நீ அணைகட்டி வாழ்
அல்லவை தேய அறம் பெருகும் !

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் என வாடிய வள்ளலார்
காட்டிய வழியில் வாழ்ந்தால்
அல்லவை தேய அறம் பெருகும் !

துன்பம் கண்டு துவண்டும் விடாமல்
இன்பம் கண்டு துள்ளிக் குதிக்காமல்
உலகில் மனிதநேயமுடன் வாழ்ந்தால்
அல்லவை தேய அறம் பெருகும் !

அன்பு என்னும் விதையைத் தூவி
பண்பு என்னும் நீரைப் பாய்ச்சி
பக்தி என்னும் உரமிட்டு
மனிதநேய பயிரை வளர்த்தால்
அல்லவை தேய அறம் பெருகும் !

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (15-Mar-17, 12:16 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 80

மேலே