உன் இடம் நான்_உன் இடதில் நான் ❤

இடைவெளி இல்லா தூரம்
இமைகளின் உள்ளே நீ
இன்இசையிலும் உன்னால் மோகம்
இதுவரை ஈர்த்ததில்லை..
என் கயல்விழி காணா காதல்
நம் கருவிழி நான்கும் மோதல்
கை விரல்களினுள்ளில் ஊடல்
எதுவரை இது தெரியவில்லை..
உன் தோலினில் சாயும் சிகரம்
சிக்கி தவிக்கின்றதோ என் இதயம்
என் வலதில் அமரும் நீ
என் வயதினை குறைத்தாய் நீ!
பகல் கனவா இது புரியவில்லை ..
நடுநிசியிலும் நமது கூடல்
நாளும் தொடருமென்ற ஏக்கம்
அலைபேசியில் உந்தன் அழைப்பு
அதை அழுத்தமாய் இசைக்கும் பாடல்...
இது நிஜந்தானா என்று எம் மனம் அறிவில்லை
❤
_கிறுக்கி