உன் உலகம்
**********உன் உலகம்**********
என் இனிய தோழனே/தோழியே!!!
இதை படிக்க சில நிமிடங்கள் செலவு செய்வாயா???
உலகில் இயங்கும் உனக்காக அல்ல,
உன்னுள் இயங்கும் உலகிற்காக.
இங்கே வேறுபட்ட மனிதர்கள்,
உடுத்த விதவிதமாய் உடை வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தைகளும் உண்டு!
அடுத்த வேளை உணவு கிடைக்குமா என ஏங்கும் குழந்தைகளும் உண்டு!
பர்தா அணிந்து வரும் பெண்களை காம கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆண்களும் உண்டு!
ஆபாச ஆடை அணிந்து வரும் பெண்களின் கண்களை மட்டும் பார்த்து பேசும் ஆண்களும் உண்டு!
மனதில் ஒருவனை நினைத்தாலே கற்பு பறிபோனது போல் பதறும் பெண்களும் உண்டு!
மானம் மரியாதை காற்றில் பறக்க விட்டு காலப்போக்கில் சிதறும் பெண்களும் உண்டு!
ஏழைகளை ஏமாற்றி பிழைக்கும் ஈன பிறவிகளும் உண்டு!
ஏமாற்றத்தில் மயங்காமல் தழைக்கும் ஏனைய பிறவிகளும் உண்டு!
வேற்றுமையை கண்டு வெருண்டோடாதே,
அறிந்தோ அறியாமலோ நீயும் ஓர் உதாரணம் தான் இவ்வுலகில்.
ஆனால்,
"உனை போல் வாழ வேண்டும்" அல்லது "உனை போல் வாழ கூடாது" என்னும் இரு வேற்றுமையில் தான் இனி வரும் உலகம் உள்ளது என்பதை மறந்துவிடாதே!!!
சிந்தித்து செயல்படு
செந்தமிழ்நாட்டை செழிக்க செய்திடு!!!
-என்றும் அன்புடன் ஷாகி