காதல் வேட்கை

என் பெண்மை தவமிருக்கு
உன் காதல் வருகைக்காக
என் வசந்தம் காத்திருக்கு
உன் இதய வாசலுக்காக
என் நினைவுகள் பூத்திருக்கு
உன் நெஞ்சில் குடிபுக
என் கழுத்து அரித்திருக்கு
உன் பூமாலை சூட்டிக்கொள்ள
நீ தரும் பொட்டுக்கும் பூவுக்கும்
என் எதிர்காலமே ஏங்கியிருக்கு
இறைவன் போட்ட முடிச்சு
அதை நீ இனிமையாகவே
நடத்திடு என் உயிரே.....

எழுதியவர் : செல்வமுத்து.M (15-Mar-17, 3:27 pm)
பார்வை : 187

மேலே