மரம் எனும் உயிர்

இருந்த்து . கரு மேகம் .கும்மென்று இருட்டு . புயலுக்கு முன் அமைதியா?. கமலா வாசலுக்கு வந்து வான் பார்த்தாள். நேரம் கடந்தது.வீட்டுக்குள் சென்று வேலை பார்த்தாள்,கதவு ஆடியதால் காற்றின் வேகம் புரிந்தது .புயல் ஆரம்பித்து விட்டது .கதவைமூட வந்தாள். வாசலில் மரம் ஆடிக்கொண்டு இருந்தது . மகள் வைத்த்மரம். அவளை போன்று தளதள வென்று வளர்ந்து இருந்தது . புயலால் பலமாக ஆடியது .கிளைகள் தரையை தொட்டன . சாய்ந்து விடுமோ மகளைப்போல? திருமணம் முடித்தபோது மாப்பிள்ளை அமைதியாகஇருந்தர் .ஆனால் புயலாக மாறக்காரணம் புரியாமலே போனது .மரம் வேகமாக ஆடியது .அவனும் அப்படித்தன் ஆடினான் .மரத்தின் கிளைகள் தலைவெறிக்கோளமாய் ஆடின .வேர்கள் சடசட என முறிந்தது .மகளைப்போல .அவன்துபுயல் போன்ற ஆக்ரோசத்தால் .அடிப்பட்ட அதே இடத்தில் சுருண்டு உருண்டு இறந்துப்போனாள். மரத்தை பார்த்து மகளை நினைத்து கண்ணீர் விட்டாள் கமலா .

எழுதியவர் : சு ராமஜோதி (15-Mar-17, 6:55 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 92

மேலே