சிந்திக்க தெரியாத மனசு

சிந்திக்க தெரியாத மனசு!
நின்னுபேச நாழி இல்லை,
நினைச்சுப் பாக்க நேரமில்லை,
இந்த பிதற்றலோடு, நீட்டிய இடத்தில்,
கையெழுத்துப்போட்டு, மாத்துது தலை எழுத்து!

பொம்பள சொல்லை, சிகரெட்டு துண்டு போல, தூக்கி வீசுது,
குடி கெடுக்கும், குசும்பர்களை, வாசலில் நின்னு வரவேற்குது,
செல்லாக்காசு ஆனாதும், சண்டாளரைச் சாடுது,
இல்லாமப் போனாலும் கெளரவம் குறைஞ்சு போகாது,
பட்ட பின்னும் மண்ணுல படுத்துப் புரளுது,
மீசையில மண்ணு ஒட்டல, மாரு தட்டுது,
விவரங் கெட்ட மனுஷனை, பாடாப் படுத்துது,
சிந்திக்க தெரியாத மனசு!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (16-Mar-17, 9:45 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 219

மேலே