மடமையை கொளுத்துவோம் ----- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சிறப்புக் கம்பர் சான்றிதழ் போட்டியாளர்


மடமைதனை கொளுத்துவோம் மாதரேநாம்
------ மாசற்ற உலகத்தைப் படைத்திடவே
கடமைதனை செய்தற்கே தடையான
------- கயவர்கள் கருத்தினையும் முறியடிப்போம் .
உடமைகளாய் நம்திறமை வெளிக்கொணர
------ உரிமையுடன் போராடுவோம் வாருங்கள் !
திடமான மனத்திறனை கொண்டாலே
------- திண்ணமான சமயுரிமை கிட்டிடுமே !!!


தீயுனுள்ளே போடுவோமே மடமைகளை
------ தீபமாக எரியட்டும் எம்மருங்கும்
பாயுனுள்ளே சுருண்டிடவும் நாமெல்லாம்
------ பாவங்கள் செய்வில்லை உணர்வீரே !
நோயான மனத்தினையும் வளர்க்காதீர்
------- நொடிப்பொழுதும் சோராது பணிசெய்வீர் !
தாயாக நமைநோக்கும் நிலைமையினைத்
------ தனதாக்கிக் கொண்டிடவே போராடுவோம் !!!


இழிவாக நினைப்பதற்கு நாம்மொன்றும்
------- இச்சகத்தில் பிறக்கவில்லை புரிவீரே !
பழிபோடும் சமுதாயம் நாளும்தான்
------ பக்குவத்தை அறியாத முட்டாள்தான் .
விழியாக இருப்போமே அனைவருக்கும்
------- விலக்காது பேணுங்கள் ஆதரவாய் .
மொழிகின்ற சொல்லெல்லாம் உண்மைதானே
------- மொத்தமாய்க் காத்திடுவீர் மங்கையரை !!!




ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Mar-17, 1:36 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 82

மேலே