மனிதம் மரிக்கவில்லை --- புதுக்கவிதை

மனிதம் மரிக்கவில்லை --- புதுக்கவிதை


மனிதமுமே மரிக்கவில்லை
மண்ணுலகில் வாழ்கின்றது .
இனிவரும் நாள் நன்னாளாய்
இருந்திடவும் செய்கின்றது
தனி ஒருவன் செய்கின்ற
கொடையதுவும்
தன்னலமே அற்றதொரு
செயலன்றோ சொல்வீரே ! ( 17 )


நிழலாகத் தொடர்கின்றது
நிசமான உயிரினங்கள் .
ஐந்தறிவு சீவனுக்கும்
நன்றியுமே நற்பண்பாகி
நன்னடத்தையைச் செப்பிடுமே !!!
ஆறறிவு மனிதயினம்
அன்புடனே ஆதரித்தல்
மனிதநேயச் செயலன்றோ சொல்வீரே !! ( 34 )


நன்றிக்கு நாய் தன்னை
மன்றினிலும் சான்றாகக்
காட்டிடுதல் மகத்துவமே !
மறுப்பிற்கும் இடமில்லை !
குளிராலே வாடுகின்ற குழந்தையினைப்
பேணுதல் போல் இங்கே
நாய்க்குமே போர்வையினை
அளிக்கின்றான் நல்லவனே ! ( 53 )


கடையேழு வள்ளல்கள் பற்றியுமே
கற்றவர்கள் நாமுந்தான் !
ஈங்கின்றே மாரியாகி
பாரியாகி ஓரியாகி அதியனாகிப்
பொழிகின்றான் மாமழையாய்
அன்பினையும் போர்வை தந்தே !
நன்றியுடன் முத்தமிடும் நாய் இங்கே !
தொடரட்டும் நல்லெண்ணம்
நம்மிடையே எந்நாளும் !!!! ( 76 )



ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Mar-17, 9:42 pm)
பார்வை : 90

மேலே