ஆதிதமிழனுக்கே ஆதியோகியா

ஆதிதமிழனுக்கே ஆதியோகியா ?


ஆதிசிவனோ ஆயிரம் இருக்க
ஆதியோகியொன்று இப்போ எதற்கு ?
ஆன்மீகத்திற்கோ ஆயிரம் கோடியில்
விளம்பரம் எதற்கு ?

ஆன்மீகமும் அன்பும் வளர
அடர்ந்த காட்டினை அளிப்பது எதற்கு?
அனைத்தையும் அறுத்து எடுப்பது
ஆன்மிக அறமாகுமா ?

காட்டினை அழித்து கடவுளை வைத்தால்
காத்து கிடைத்திடுமா ?காட்டாறு பெருகிடுமா ?
மரத்தினை அழித்து புது மார்கமென்றால்
மழைதான் வந்து பொழிந்திடுமோ ?

ஆன்மிக அரசியலை
அறுத்தெடுப்போம்
ஆதிதமிழன் இருப்பிடத்தை
மீட்டெடுப்போம்

எழுதியவர் : சே .மகேந்திரன் (18-Mar-17, 9:51 pm)
சேர்த்தது : smahendhiran
பார்வை : 87

மேலே