பெற்றோர் போற்றி
அன்பிற்கினிய பெற்றோர் மேல் 108 போற்றித் திருவுரு
என் அன்பு பெற்றோர்களுக்கு அன்புக் காணிக்கை
1 ஓம் அக்கரையாய் எம்மைக் காத்திட்டீர் போற்றி
2 ஓம் அங்கமெல்லாம் குளிர்ந்தே காத்திட்டீர் போற்றி
3 ஓம் அகமும் புறமெங்கும் என்றும் திகழ்ந்திடுவீர் போற்றி
4 ஓம் அகிலமும் எனக்கென்றும் நீவீர் போற்றி
5 ஓம் அடைக்கலம் உம் மலர் பாதங்கள் போற்றி
6 ஓம் அன்றும் இன்றும் என்றும் உம் புகழ் பாட அருள்வீர் போற்றி
7 ஓம் அனவரதமும் கத்தருள் புரிவீர் போற்றி
8 ஓம் அறம் பொருள் இன்ப வீடு நல்கிக் காத்தருள்வீர் போற்றி
9 ஓம் இக பர சுகம் வேண்டிலேன் போற்றி
10 ஓம் ஈகையிலே சிறந்துயர்வாய் என்றீர் போற்றி
11 ஓம் ஈடற்ற கருணை புரிந்தீர் போற்றி
12 ஓம் ஈடு இணையற்ற எம் தெய்வம் போற்றி
13 ஓம் ஈடில்லாக் கருணை மழைமுகில் போற்றி
14 ஓம் ஈரேழு உலகு யாவும் எமக்கென்றும் நீவீர் போற்றி
15 ஓம் உள்ளும் புறமுமாய் நின்றீர் போற்றி
16 ஓம் உற்ற துணை எமக்கு என்றென்றும் நீவீர் போற்றி
17 ஓம் உன்னதப் பொருளாய் திகழ்கின்றீர் போற்றி
18 ஓம் உடமை யாவும் நீவீர் போற்றி
19 ஓம் உடலுறுப்புகளைக் காத்தருள்வீர் போற்றி
20 ஓம் உயர் நலங்கள் தந்தே காத்தருள்வீர் போற்றி
21 ஓம் உயிரினங்கள் நலம் வாழ உதவிடுவீர் போற்றி
22 ஓம் உலகோரையும் காத்தருள்வீர் போற்றி
23 ஓம் ஊக்கம் தந்தெம்மை காத்தருள்வீர் போற்றி
24 ஓம் ஊக்கமதைக் கைவிடா நிலையருள்வீர் போற்றி
25 ஓம் ஊமைகளைப் பேச வைப்பீர் போற்றி
26 ஓம் எங்கள் குலவிளக்காய் திகழ்வீர் போற்றி
27 ஓம் எண்ணம் செயல் யாவும் எமையே நினைந்தீர் போற்றி
28 ஓம் என்றுமே எங்களை இனிதாய் காக்கின்றீர் போற்றி
29 ஓம் ஏற்றம் நாங்கள் பெற உறுதுணை செய்வீர் போற்றி
30 ஓம் கண்கண்ட எம் தெய்வம் போற்றி
31 ஓம் கண்ணியமுடன் வாழ வழிசெய்வீர் போற்றி
32 ஓம் கண்ணின் மணியெனவே கருத்துடன் காத்தீர் போற்றி
33 ஓம் கண்ணென விளங்கும் நற்கல்வி தந்து காப்பீர் போற்றி
34 ஓம் கருணைக் கடலாய் சுரந்தே கனிவுடன் காத்தீர் போற்றி
35 ஓம் கருத்தாய் செயல்புரிய கனிவுடன் அருள்வீர் போற்றி
36 ஓம் கருத்தினில் என்றும் இருந்து காத்தருள் புரிவீர் போற்றி
37 ஓம் குணநலன்கள் குறைவின்றிப் பெறச்செய்வீர் போற்றி
38 ஓம் குருடர்களுக்குப் பார்வை நல்கி ஒளிபெறச் செய்வீர் போற்றி
39 ஓம் குறையேதும் சிறிதின்றி தினம் கத்திட்டீர் போற்றி
40 ஓம் குறைவற்ற செல்வங்கள் நல்கி அருள்வீர் போற்றி
41 ஓம் கூரிய நினைவாற்றல் பெற அருள்வீர் போற்றி
42 ஓம் கெடுதல் நேராமல் காத்தருள்வீர் போற்றி
43 ஓம் கேள்வி ஞானம் நித்தம் நீ பெற்றுயர்வாய் என்றீர் போற்றி
44 ஓம் சங்கடங்கள் பல போக்கி சந்ததமும் காத்தருள்வீர் போற்றி
45 ஓம் சங்கீத மழைப் பொழிந்தே சரணம் போற்றுவேன் போற்றி
46 ஓம் சந்ததமும் தளராமல் சாந்தமுடன் திகழ்வீர் போற்றி
47 ஓம் சப்தஸ்வரம் இசைத்தே சரணம் போற்றுவேன் போற்றி
48 ஓம் சர்வமுமாய் என்க்குள்ளே திகழ்ந்தினிதே காப்பீர் போற்றி
49 ஓம் சடுதியில் வந்தினிதே சந்ததமும் காப்பீர் போற்றி
50 ஓம் சுந்தரத் தமிழால் உங்கள் பதமலர் பணிவேன் போற்றி
51 ஓம் செம்மையாய் செயல்புரிய சிறப்பாய் அருள்வீர் போற்றி
52 ஓம் செவிப்புலன் திறம்பட செயல்புரிய வைப்பீர் போற்றி
53 ஓம் தஞ்சமென உமை சரணடைந்தேன் போற்றி
54 ஓம் தத்துவப் பொருள் நீவீர் போற்றி
55 ஓம் தன்னம்பிக்கை விதையூட்டி தளிர்த்திடச் செய்தீர் போற்றி
56 ஓம் தன்னலம் கருதா தயவுடன் விளங்கினீர் போற்றி
57 ஓம் தயவுடன் காப்பீர் போற்றி
58 ஓம் தயாள குணமுடையீர் போற்றி
59 ஓம் தலைமைப் பொருள் நீவீர் போற்றி
60 ஓம் தவத்திரு வடிவம் நீவீர் போற்றி
61 ஓம் தவறாமல் காத்தருள்வீர் போற்றி
62 ஓம் தவறுகளைப் பொறுத்தருள்வீர் போற்றி
63 ஓம் தன தான்யம் தந்தருள்வீர் போற்றி
64 ஓம் தனிப்பெரும் கருணையாய் திகழ்வீர் போற்றி
65 ஓம் தாய் தந்தை சரணம் போற்றி
66 ஓம் திசையாவும் நின்றே திடமுடன் காத்தருள்வீர் போற்றி
67 ஓம் தீங்கிழைப்போரை திருத்தியருள்வீர் போற்றி
68 ஓம் தீமை பல போக்கிடுவீர் போற்றி
70 ஓம் தீய குணம் மாய்த்தருள்வீர் போற்றி
71 ஓம் நம்பிக்கை ஒளிதீபம் நீவீர் போற்றி
72 ஓம் நம்பிடும் எமைக்காப்பீர் போற்றி
73 ஓம் நல்லறம் புரிய துணைவருவீர் போற்றி
74 ஓம் நற்சிந்தனை தனை மட்டும் போதித்தீர் போற்றி
75 ஓம் நன்னடத்தை நல்கிடுவீர் போற்றி
76 ஓம் நலம் பல புரிந்திடுவீர் போற்றி
77 ஓம் நளின மலர் பாத கமலங்கள் பணிந்திடுவோம் போற்றி
78 ஓம் நான்மறை வேதப் பொருளாய் திகழ்ந்திடுவீர் போற்றி
79 ஓம் நாணயமாய் வாழ்தலே உயர்வென்றீர் போற்றி
80 ஓம் நாவினில் நின்று நல்லோசை அருள்வீர் போற்றி
81 ஓம் நாளும் துணைவருவீர் போற்றி
82 ஓம் நாளும் துதிபுரிவோம் போற்றி
83 ஓம் நிந்தனை செய்வோர் மனம் மாற அருள்வீர் போற்றி
84 ஓம் நிம்மதி நிலைத்திடவே நிதம் அருள்வீர் போற்றி
85 ஓம் நிறைவாழ்வு தனை மட்டும் எண்ணவத்தீர் போற்றி
86 ஓம் நோய்கள் யாதேனும் சிறிதும் அணுகாமல் நிதம் காத்தருள்வீர் போற்றி
87 ஓம் நோயற்ற வாழ்வு யாவரும் வாழ நிதம் அருள்வீர் போற்றி
88 ஓம் பக்கத் துணை புரிந்தே பரிவுடன் காப்பீர் போற்றி
89 ஓம் பஞ்சபூதங்களில் நிறைந்தே காத்தருள்வீர் போற்றி
90 ஓம் பண்பு பல ஊட்டி நாளும் பார்புகழ வைத்தீர் போற்றி
91 ஓம் பற்பல நன்மை எம் பொருட்டு பாங்காய் இயற்றினீர் போற்றி
92 ஓம் பகலிரவாய் நாளும் நாளும் பரிவுடன் காத்தீர் போற்றி
93 ஓம் பசிபஞ்சம் போக்கியே பக்கத்துணை வருவீர் போற்றி
94 ஓம் பரிதவிக்கும் எம்மை நாளும் பாங்காய் காப்பீர் போற்றி
95 ஓம் பல கவிதை இயற்றி உங்கள் புகழிசைப்பேன் போற்றி
96 ஓம் பலவாறு புகழாரம் சூட்டிடுவேன் போற்றி
97 ஓம் பிரதிபலன் பார உதவி அருள வைப்பீர் போற்றி
98 ஓம் பொறாமை குணமதனைப் போக்கிடுவீர் போற்றி
99 ஓம் மனதார உமைப் பணிவோம் போற்றி
100 ஓம் முடவர்களை நடக்கவைப்பீர் போற்றி
101 ஓம் முப்பொழுதும் காத்தருள்வீர் போற்றி
102 ஓம் மெத்தவே உங்களைப் புகழ்ந்திடுவேன் போற்றி
103 ஓம் விபத்துக்கள் நேராமல் காத்தருள்வீர் போற்றி
104 ஓம் விரைவாய் கனிவாய் நலமே புரிந்தே காப்பீர் போற்றி
105 ஓம் வேண்டுதலை அறிந்தெம்மை காத்தருவீர் போற்றி
106 ஓம் வேதமறையாவும் போற்றும் வித்தக வடிவம் நீவீர் போற்றி
107 ஓம் வையகம் யாவும் உமையே புகழும் போற்றி
108 ஓம் வையகமுமாய் வானகமுமாய் யாவுமாய் திகழ்ந்தினிதே காத்தருள்வீர் போற்றி போற்றி.
சுபம்