தமிழ் மொழி

சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்
சபைகளில் தமிழ் எழுந்து முழங்க வேண்டும்
என்றனர் சான்றோர்

தமிழகத்தில் தமிழை பேச வேண்டும்
ஆங்கிலத்தின் அடிமை தனம் ஒழியவேண்டும்

தமிழின் தரம் உயர வேண்டும்
சரித்திரத்தில் தமிழன் பெயர் இருக்க வேண்டும்

தாழ்த்தப்பட்டவர்களின் நிலை உயரவேண்டும்
சாதிகள் முற்றிலும் ஒழிய வேண்டும்

சமயகட்டுப்பாடுகள் நீங்க வேண்டும்
சமரச உணர்வு தோன்ற வேண்டும்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழர் உண்டு
இதை கண்டு அஞ்சிய சில நாடுகளும் உண்டு

தங்கத்தின் தரம் குறைந்தாலும்
தமிழின் தரம் குறையாது

தண்ணீர் உள்ளவரை தாமரை வளர்வது போல
தமிழன் உள்ளவரை தமிழும் வளரும்

எழுதியவர் : தமிழ் செல்வன்.ஏ (19-Mar-17, 3:31 pm)
சேர்த்தது : தமிழ் செல்வன்
Tanglish : thamizh mozhi
பார்வை : 355

மேலே