மடலேறியிருப்பேன்
சித்திரை பிறை செவியுடையோளே !
மடலேறியிருப்பேன்
நீ மறுத்த மொழி செவிகேட்டிருந்தால்
சேரக்கொடி வில் விழியுடையோளே !
மடலேறியிருப்பேன்
நீ இல்லா வீதிதனை விழி நோக்கியிருந்தால்
செம்மாதுளை இதழ் உடையோளே !
மடலேறிருப்பேன்
நீ முத்தமிடா இதழ் சுவைகொண்டிருந்தால்
குறிஞ்சி தன்னின் மணமுடையோளே !
மடலேறியிருப்பேன்
நீ சூடா மலர்தனை நான் நுகர்ந்திருந்தால்
மழலை பாத தேகமுடையோளே !
மடலேறியிருப்பேன்
பெண்டிர் தொடுதலில் உணர்வுற்றிருந்தால்
ஆதியாய் அந்தமாய் ஆகி நின்றவளே !
மடலேறி பின் மரிக்க மலையேறியிருப்பேன்
நீ வெறுத்தும் ஐம்புலன் உயிரோடிருந்தால்..
$வினோ....