தென்றலே மலர்களே

தென்றலே மலரிதழ் தழுவு
மலர்களே அவள் மெல்லிய விரல் தழுவு
விரல்ககளே வீணை நரம்பினை தடவு
வீணையே சுக ராகங்கள் பாடு
ராகங்களே என்கவிதைப் பக்கங்களைத் திருப்பு
என் கவிதைப் பக்கங்களே அவள் புன்னகைப் புத்தகத்தைத் திருப்பு
புன்னகைப் புத்தகமே என்னைத் திரும்பிப் பார் !

---கவித்தென்றல் கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Mar-17, 10:42 am)
பார்வை : 221

மேலே