ஊடல் உணர்த்திட்ட உண்மை

எந்தன் ஒண்தொடி என்னாசை
உடைத்திடும் வன்கொடியென்று
நினைத்திருந்தேன் இதுவரை-அவள்
என்னாசை உடைத்திடும் வன்கொடியன்று எனக்காக வளைந்திடும் மென் கொடியென்று
என்தடி தாங்கி எனக்கின்று
உணர்த்திவிட்டால் இந்த பெண்கொடி

ஒண்தொடி : தலைவி
என்தடி:என் உடல்

எழுதியவர் : (21-Mar-17, 11:20 am)
சேர்த்தது : நரசிங்கமூர்த்தி
பார்வை : 1213

மேலே