❤ என் யவன்

ஆதியும் நீ
என் அந்தமும் நீ !
ஆசையும் நீ
அரவணைப்பும் நீ !
இன்னிசையில் நீ
இமையிடைகளில் நீ !
புதுராகமாய் நீ
பூஞ்சோலையாய் நீ !
குயில் கீதமாய் நீ
குழலோசையாய் நீ !
முழுநிலவாய் நீ
முக்கனியாய் நீ !
உயிர்மெய் எழுத்தில் நீ
உவமைகளில் நீ !
ஏக்கம்_ செய்வதும் நீ
எதிர்க்காற்றாய்_எனை அசைத்ததும் நீ !
எந்தன் ஐயமும் நீ
ஐஸ்வர்யமும் நீ !
அகிலமும் நீ
ஐம்பூதமும் நீ !
மழலைபோல் நீ
சின்ன மழைத்துளியும் நீ !
மேகமாய் நீ
மெல்லிசையிலும் நீ !
என் வானமும் நீ
வண்ண வானவில் நீ
வாழ்க்கையும் நீ
என்னை வதைப்பதும் நீ !
என் யாவும் நீ
என்னவனும் நீ !..
❤
_கிறுக்கி