கலப்படம்
கலப்படம்
செழிப்புடன் நடக்கும் வியாபார உத்தி.
விழிப்பணர்வு தான் மக்களுயர் புத்தி.
இழிஞர் செயல் இயற்கையையே ஏய்த்தல்
அழிப்பதிதை யென்பது முயற்கொம்பு வைத்தல்
பாலிலே நீர் புரதம் யூரியாவுடன்
பாதகமாய் அமோனியமும் கலக்கி விற்பனை.
பாலர், நோயாளிகளிற்கும் பாடாவதி செய்கிறார்.
பாதுகாக்கும் உயிருக்குதவும் மருந்திலும் கலப்படம்.
அரிசியில் கற்கள். நீரில் கழுவுகிறோம்.
அரிக்கன் சட்டியால் பிரித்து எடுக்கிறோம்.
சரியான பொருளின் சாயலில் இன்னொரு
உரித்தான பொருள் கலந்து பொருளீட்டல் கலப்படம்.
கூகிளிணையம் புகுந்து கலப்படப் பொருளறிந்தால்
கூச்சல் பயங்கரமாய் எழும் இதயத்தால்
நீரிழிவு நோய், வயதிற்கு மீறியவுடல்
நிறை, ஆபத்துகள் கணக்கின்றி வரும்.
விஞ்ஞானம் நன்மை, தீமையாய் சமூகவிரோதிகளாம்
மெஞ்ஞானமற்ற பணமுதலைகளின் கலப்படப் பெருக்கம்.
உணவுப் பாதுகாப்பாளர், தரக்கட்டுப்பாட்டாளர், சுற்றுச்
சூழல் மையங்கள் பரிசோதனை அவசியம்.
நன் கொடை இரத்தத்திலும் கலப்படமாம்
வன்மை நிலை! எத்தனை பேராபத்து!
இயற்கையோடு இணைந்த பொருட்கள் வாங்கி
செய்கையாய் வீட்டில் பொருளாக்கல் சிறப்பாம்.
நிலவரம் எதற்கும் துணியும் பணவெறியர்.
கலவரம் காக்க நல் விபரமறிந்து
கலப்படமற்ற கொள் முதலே நலமுடைத்து
கலாச்சாரக் கலப்படம் இரவாட்டம் காதலர்தினமுமன்றோ!
பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க்
7- 2016