உறுத்தல்....இல்லையா?

நீ, உணர்ந்து கொள்ள-என்
எழுத்தில், உள்ளத்தை உள்வைதேன்,
எடுத்து படித்து,நீ....உணர்ந்தபின்னும்,
என் உள்ளம்.....மறுத்தாய்?

உனை, கண்ட..... விழிகளுக்கும்,
உன் பெயரை, உச்சரித்த......உதடுகளுக்கும்,
உனை தொடர்ந்த .....கால்களுக்கும்,
தடை விதித்தாய்.....

தடைகள் யாவும்......
வெளித்தசைகளுக்கே.......!,
தடையையும்....மீறி,
உனைச்சுற்றியே.....என் உள்ளம்!

என் உள்ளத்திற்கு, மிஞ்சியது......
நினைவுக்காயங்கள்.......மட்டுமே.!
தூண்டுதலாயிருந்த........உனக்கு......
உறுத்தல்கள் கூடவா.......இல்லை?

எழுதியவர் : கு. காமராஜ் (13-Jul-11, 6:09 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 436

மேலே