மடலேறும் மன கள்வா
மடலேறும் மன கள்வா...
தேனுடோடு கலவும் குளவிதன்னில் கேளாய்
வானோடு மகிழும் முகில்தன்னில் கேளாய்
பனியோடு விழிக்கும் புல்தன்னில் கேளாய்
நதியோடு குலையும் வேர்தன்னில் கேளாய்
ஆழியோடு துயிலும் கதிர்தன்னில் கேளாய்
ஒளியோடு உறவும் நிழல்தன்னில் கேளாய்
மனம்கொள்ள இவையும் மனமேறல் அன்றி
உனைபோல் பிழையாய் மடலேறல் ஏது
மடலேறி நீயும் மலையேறல் கொண்டால்
மங்கை உன்மெய்யில் உடன்ஏறி ஒளிர்வாள்..
$வினோ...