உனக்காகவே நான்

.............பல்லவி..............

அன்பே...அன்பே
உன் அழகில் என் இதயம்
நானும் தொலைத்தேனே
காதல்....காதல்...
தூண்டிலுக்குள் எனையே
முழுதாய் இழந்தேனே...

மொழிகள் நீயும் தந்தாயடி..
பகலும் இங்கே இரவாய்
மாறுதே..
மேகத்துளிகள் உன்னைத்
தேடி வானிறங்கி வந்தது
போல..
மனமும் தினமும் உனையே
தேடுதே...

(அன்பே....அன்பே....)

..........சரணம்-01...............

இறக்கை முளைத்த பூவாக
பறந்து நீயும் திரிகின்றாய்...
இரக்கமில்லையோ என்னிடத்தில்
இறங்கி நீயும் வருவாயோ?

பிரம்மன் வரைந்த ஓவியமே
எனையும் கவிஞனாய்
மாற்றிவிடு..
காகிதமெல்லாம் குடை பிடிக்க
முத்த மழையில் நனைவோமே..

(அன்பே...அன்பே...)

..............சரணம்-02...............

வலிகள் கூட வரமாய் மாறுதே
காயம் அனைத்தும் கனியாய்
இனிக்குதே..
இந்த காதல் மட்டும் இத்தனை
இம்சையா?

அதரம் உதிர்க்கும் சொல்
வேண்டாம்...
எனை அள்ளிக் கொஞ்சும்
விழிகள் போதும்..
அரவணைக்க நீ வேண்டும்
காலமெல்லாம் அது போதும்...

(அன்பே....அன்பே...)

-உதயசகி-

எழுதியவர் : அன்புடன் சகி (22-Mar-17, 2:38 pm)
Tanglish : unakaakave naan
பார்வை : 1580

மேலே