வாத்தியார்-மாணாக்கர் உரையாடல்
கிராமத்து பள்ளி வாத்தியார்: ( பள்ளிக்கு சேர்ந்த முதல் நாள் வகுப்பில் நுழைந்தவுடன்)
என் அருமை மாணவர்களே இனிய காலைப்பொழுது ,
இனிய காலைப்பொழுது ..............
மாணவர்கள் (வாத்தியார் சொன்னது என்ன என்று புரியாது): குடு மார்னிங்கு ஐயா
குடு மார்னிங்கு ..........
வாத்தியார் : (திகைத்து நிற்கையில் ஒரு மாணவன் கூறுகிறான்)
ஐயா நாங்க குடு மார்னிங்ன்னு சொல்லியும் நீங்க
ஒன்னும் சொல்லலையே என் ஐயா ............
வாத்தியார் : அருமை மாணவர்களே நான் நான் இனிய காலைப்பொழுது
என்றேன் புரியவில்லையா ? அது தானடா ஆங்கிலத்தில்
நீங்கள் சொல்ல வந்த குடு மார்னிங்கு .....................
அருமை மாணவர்களே அது "குட் மார்னிங் ", குடு மார்னிங்கு
அல்ல ................அந்த ஆங்கில வணக்கம் எதற்கு
இன்று முதல் இனிய காலை வணக்கம் என்று கூறுவேன்
நீங்களும் அதையே கூற பழகுங்கள்
தமிழை அறிந்து கொள்ளுங்கள்........தமிழிலேயே பேசுங்கள்
ஆங்கிலம் பாதிக்கும்போது அதை சரிவர கற்றுக்கொள்ளுங்கள்
சரியா ....................
மாணவர்கள் : எஸ், ஐயா .............
வாத்தியார் : சரி ஐயா என்று சொல்லுங்கள் !
மாணவர்கள் (மறதியில்) எஸ் ஐயா (வாத்தியார் அசந்து போகிறார்)
வாத்தியார் (மனதிற்குள்) : (என்று தணிந்திடும், இந்த அடிமையின் மோகம் ........!!!!!!!!