ஒருபக்க காதல்கதை பாகம் -22

அவன்: மறுபடியும் உன்ன பாக்க வந்தா என்ன திட்டி அனுப்பிடுவன்னு நெனச்சேன், என்ன மதிச்சு வந்ததுக்கு நன்றி
அவள்: எதையுமே தைரியமா சந்திச்சுதான் பழக்கம் எனக்கு ...ம்..சொல்லு..
அவன்: உன் பின்னால வர்றது, பூங்கொத்து தர்றது, புடிச்சத தெரிஞ்சுக்குறது, புடிச்சமாரி நடந்துக்குறது, பன்பட்டவன் மாதிரி பேசுறது, புரிய முயற்சிக்கிறது, போன்ல பொறுக்குறது, போற இடமெல்லாம் பின்தொடருறது .. இதுதான் இந்த சமுதாயம் காதலுக்கு கருவியா கருதுது ..இதெல்லாம் எனக்கு செய்யணும்னு தோனல ஆனா உன்கூட எந்நேரங்கள செலவிடனும்ன்னு தோணுது.உனக்காக உயிரெல்லாம் விட மாட்டேன்.உன்கூட பேசிக்கிட்டே இருக்கலாம் எனக்கு நேரமில்ல.உன்கூட ஊருசுத்தவும்..ஆ ஊ நா வந்து நிக்கவும் விருப்பமில்லை...ஒரு வெளியூர் போனா நமக்கு பிடிச்ச குடும்பத்தோட சேந்து சந்தோஷமா போவோம்ல..அதுல முதல் ஆளா நீ இருக்கணும்னு தோணுது...இது சத்தியமா காதல் இல்ல..முடிவா சொல்லு நான் கெளம்பிடுறேன்..நாளைலேந்து வேலை இருக்கு..
அவள்: (சற்று பேசியதை உள்வாங்க நேரமெடுத்து)..எதுவும் வேலைக்கு ஆகலைன்னு இந்த வழிக்கு வந்தாப்புல தெரியுது
அவன்: தெளிவாகுறேன்னு நெனைக்கிறேன்
அவள்: தெளிவாகுறியா ...என்ன குழப்ப நினைக்கிறியா ?
அவன்: எளிதா வாழ நினைக்கும்போது, எது எளிதுன்னு குழப்பம்தான் வரும்
அவள்: சேரி எளிதாவே சொல்றேன் ..உன்னோட பயணத்துல எனக்கு இடமிருக்கு..என்னோட பயணத்துல உனக்கு இடமில்ல ..போதுமா
அவன்: கொஞ்சநேரம் படியில பயணம் ?
அவள்: படியில் பயணம் நொடியில் மரணம் (என எப்பொழுதும்போல் இதழோர புன்னகை தவழ்ந்து புள்ளிக்கு பக்கத்தில் இரு புள்ளிகள் வைத்து ஒருபக்கக் காதல் கதையை தொடர்கதை ஆக்கிச்சென்றாள் )