வாழாவெட்டி

அதென்ன தமிழில்
அசிங்கமாய் ஒரு சொல்
நாங்கள் வாழ்க்கையை
வெட்டிக் கொண்டவர்களல்ல
தவறாத மனிதனைக்
கட்டிக் கொண்டவர்கள்
நிலவை ஏற்க
வானம் மறுக்குது
குற்றம் வானிடமா நிலவிடமா
பிறந்த வீடும் சுமையாக
சமூகம் பார்க்குது கேள்விக்குறியாக
கொலை செய்தவன் கொடைக்கானலில்
கொல்லப்பட்டவன் குற்றவாளிக் கூண்டில்
வாழையாய் வாழ நினைக்கிறோம் நாங்கள்
வெட்ட துடிக்காதீர் குலையோடு நீங்கள்
வார்த்தைகளால் வறுக்க. வேண்டாம்
கேள்விகளால் நாளும் சுருக்க வேண்டாம்
பரிதாபமும் வேண்டாம் பரிகாசமும் வேண்டாம்
பறக்க விடுங்கள் எங்களை
வரத்தை இழந்து
சாபம் பெற்றவன்
வாழா வெட்டனாகட்டும்!

எழுதியவர் : லட்சுமி (24-Mar-17, 5:37 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 483

மேலே