என்றும் மாறாத நட்பு
வணங்காமுடியும்
வணங்கி செல்வது நட்பு
காதலுக்கு தோல் கொடுத்து
கரைசேர்ப்பது நட்பு
இன்னல் காலங்களில்
இன்முகத்தோடு
உதவி கரம் நீட்டுவது நட்பு
மண்ணும் நீரும் விதையும்
ஒன்று சேர்ந்தால் பசுமை
நம்பிக்கை நாணயம் தியாகம்
ஒன்று சேர்ந்தால் நட்பு
அன்று முதல் இன்று வரை
எத்தனையோ கால மாற்றம்
நட்பில் மட்டும் இல்லை
எந்த மாற்றமும்
அன்று
துரியோதனன் கர்ணன்
கண்ணன் அர்ஜுனன்
ராமன் குகன்
இன்று
நீயம் நானும்
நட்பு புனிதமானது
கற்பு போல....