பச்சோந்தி-அரசியல்வாதி

எதிரியவன் மலையேற, இழந்தவன் கலங்கி நிற்க,
வேடிக்கை பார்த்த நீ துள்ளினாய்,
எதிரியான அவனை தண்டித்தே ஆக வேண்டுமென....

எதிரியவன் மலையிறங்கி மனம் திருந்தி,
இழந்தவனுக்குத் தன்னால் இயன்றதைக் கொடுக்க முன்வர,
வேடிக்கை பார்த்த நீ மலையெறிவிட்டாய், இழந்தவனுக்கென்ன பிச்சையா இடுகிறீர்களா என்று???...

வன்மம் கொண்டவன் அவ்வன்மத்தாலே அழிதல் போலே,
போலி வேடம் தரித்த உன் அழிவும் உனது போலி வேடத்தாலே....

தன்மானம் எட்டி பார்க்கிறதோ???...

இவ்வளவு தன்மானம் இருக்கிற நீ எதற்காக உனக்கு அது வேண்டும்? இவ்வளவு லட்சம் கோடி கொடு, என்று அடுத்தவரிடம் கையேந்தி நிற்கிறாய்??..

கொடிய நாகத்தைக் கூட நம்பலாம்...
ஆனால், உன்னை நம்ப முடியாது....
எப்போது கழுத்தைக் கடித்து உதிரம் குடிப்பாய் என்று தெரியாது....

வெள்ளையாடை அணியும் நீயொரு பச்சோந்தி...
நினைத்து, நினைத்து முடிவை மாற்றிப் பேசுவாய் உனது சுயநலத்திற்காக....

நல்லவனாகவே வாழ வேண்டுமென்று கொள்கையோடு வாழும் என்னையே உன்னைக் கொலை செய்ய எண்ணும் மிருகமாக மாற்றுகிறாயெனில்,
நீ எவ்வளவு கொடிய மிருகமாக இருக்கிறாய்? என்பதைச் சிந்தித்துப் பார்.....

ஓம் சாந்தி ஓம்.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (27-Mar-17, 5:59 pm)
பார்வை : 1560

மேலே