கைக்குழந்தையின் முன் ஒருக் கேள்வி
![](https://eluthu.com/images/loading.gif)
செல்லக்குட்டியே அழுகாதே
வந்துவிட்டேனடா உன்னைத்தேடி
கைகள் பட்டவுடன் சிரிக்கிறாயே
நீ என்னக் கைக் குழந்தையா
வலதுப் பக்கம் உன்னைத் தீண்ட
என்னை நானேப் பார்க்கின்றேன்
அழுக்குகள் தினமும் உன்னைச் சூழ
துடித் துடித்துப் போகின்றேன்
வாடாக் கண்ணா என் கண்ணா
வாக்கிங்க் போகலாம் என் மன்னா
என் மேல் நிலவுப் பட்டாலும்
உம்மை இறுக்கி அணைக்கின்றேன்
கதிரவன் என்னைச் சுட்டாலும்
சுருண்டுப் படுத்துச் சினுங்குகிறேன்
ஆச்சரியம் என்னை தினம் சூழ
கேள்விக்கனையை தொடுக்கின்றேன்
சூரியன் ஒளியெல்லாம் சும்மாவா
வாட்ஸ்அப் ஒலி கேட்டு நான் எழ!