என் போதிமரம்
போதிமரம்
******************************
பூங்காவின்
கட்டைகளில் அமர்ந்தபடி
புங்கை மர நிழலில்
பிரிந்த போன என்
பால்ய காதலின் நினைவுகளை
தனிமையோடு ஒப்பிட்டு
துயர்பட்டு கொண்டிருந்த வேளையில்
அந்த அடர் சாம்பல் நிற
இறகு ஓன்று என்முகம்
தழுவி மடிமீது உறைவிடம்
கேட்டு நுழைந்த நாழிகையில்
கலைந்து போயின
அந்த நினைவின்
துயர் முடிச்சிகளின்
இறுதியில் என் விழிகளில்
சுரந்து நின்ற கண்ணீர்துளிகள்
இறகை விரலால் எடுத்து
என் உள்ளங்கையின் வெப்பத்தில்
புதைத்து மீண்டும் அதை
வருடியபடி நடக்க துவங்கினேன்
அந்த இறகின் பிரிவை
எண்ணில் உணர்ந்த படி
என் காதலியின் பிரிவும்
அதன் பறவையின் பிரிவும்
சரிவிகிதத்தில் இல்லை தான்
இருந்தும் எனக்குள் இந்நிகழ்வுகள்
பிரிவு என்பது நிரந்தரமில்லை
இறகுக்கு நானும்
எனக்கு இறக்கும் போல
சில பிரிவுகளுக்கு பின்பாய்
துணை மாறலாம் என்பதை
போதித்தே அனுப்பியது
புத்தரின் போதிமரம் போல்
எனக்கும் அந்த புங்கை மரம்…..
#பாரதி...