செல்வாவின் காதல்

என் விழி இரண்டும்
என் பேச்சை கேட்காமல்
உன் விழியோடு
மொழிபேசி வாழ்கின்றதே...

காற்றை கட்டி போடுவதற்கும்
வழி பல கண்டேனடி
ஆசை கட்டிபோட ஒரு
வழி இல்லையடி...

என் நெஞ்சில் ஒரு காதல்
கருவாகி உருவாகி
உன்பேர் சொல்லுதே
அதை அழிக்காமல்
வளர்த்தாலே அது
என்பேர் சொல்லுமே..

நெஞ்சங்கள் இடம்மாறி
சேர்வதுதான் காதல்
மஞ்சங்கள் தடம்மாறி
போனாலே மோதல்
இந்த வஞ்சமில்லா காதல்
வழிமாறிபோனாலே சாதல்...

கண்மூடி உறங்க காலமுண்டு
மண்மூடி மறையவும் நேரமுண்டு
நான் கண்மூடி உறங்காமலே
மண்மூடி போவேனோ என்பதும்
உன் கையில் உண்டு...

தினம் தினம் உன் முகதரிசனம்
எனக்கு உதயமடி
நீ தோன்றாமல் போனாலே எனக்கேது விடியலடி
உறங்காமல் நான் படைத்த
கவிதையடி நீ
அதை நீ படிக்க உன் மடியில்
கிறங்கினேனடி நான்...

எழுதியவர் : செல்வமுத்து.M (29-Mar-17, 10:29 pm)
பார்வை : 90

மேலே