யாரும் இல்லை

பிறந்த மண்ணில்
பயிர் செய்ய
வழி இல்லை

வளர்ந்த மண்ணில்
வாதம் செய்ய
உரிமை இல்லை

உழைத்த மண்ணில்
உறுதுணையாக நிற்க
யாரும் இல்லை

நன்செய் மண்ணுக்கு
நியாயம் சொல்ல
யாரும் இல்லை

தரையை சுரண்டுபவனை
தட்டி கேட்க
யாரும் இல்லை

எதற்கும் இன்று
எழுச்சி செய்ய
யாரும் இல்லை

நடப்பதே நாளையும்
நீடித்து நின்றால்

அரிசி உண்ணவும்
அண்டத்தில் நாளை
யாரும் இல்லை

எழுதியவர் : புகழ்விழி (29-Mar-17, 10:47 pm)
Tanglish : yarum illai
பார்வை : 943

மேலே