புன்னைவன அரசி

புன்னை வன அரசியே
வேப்பமரத்து கொழுந்தும் இனக்குதடி
காக்கையும் அழகாய் தெரியுதடி
நிலவும் கையில் அமருதடி
கால்களும் வானில் பறக்குதடி.
சூரியனின் அருகில் நிலவு வளருதடி
இரவிலே சூரியன் ஒளிருதடி
தேனும் கசக்குதடி
தென்றலும் வீச மறுக்குதடி
மண்குதிரையும் ஓடுதடி
மல்லியும் மனம்வீச மறந்ததடி
என் மனசு உன்னை கான தவிக்குதடி...

எழுதியவர் : சக்திவேல் (30-Mar-17, 11:25 am)
சேர்த்தது : சக்திவேல் வீரா
பார்வை : 70

மேலே