ஒரு மனதோடு
வாழ்கிறோம் ஒரு மனதோடு
காண்கிறோம் ஒரு கனவை
எங்கள் மனம். வெள்ளை பனிமலை
எங்கள் பலம். அசையா இமயமலை
எங்கள் ஆசை சேர்ந்து வாழ்வதே
சேர்ந்து கடித்து தின்றோம்
ஒரு மாங்காயை
சேர்ந்து துடைத்து நின்றோம்
ஒரு துளி கண்ணீரை
சேர்ந்து பகிர்ந்தோம் அன்பை
ஒர் உயிராய்
சேர்ந்து உயர்தினோம் சிறப்பை
ஒரு தோளில்
சேர்ந்து ஓடுகிறோம் தொட
வாழ்க்கையின் வெற்றியை