கல்லூரி பருவ ,கடைசி நிமிடங்கள்

எங்கு வைத்த புள்ளி இது ??

கணக்கெடுத்து
முடிப்பதற்குள்
கடைசி நொடிகளும்
வந்துவிட்டன !!

என் கல்லூரி பருவ
நிகழ்வுகளை
எண்ணி பார்க்க
நவரசங்களும்
என்னுள்
மாறி மாறி
ஜொலிக்கிறது ***

உயரமான கட்டிடங்கள்
பிரமிப்பான மனிதர்கள்
உளறல்களும் உணர்வுகளான விநோதங்கள்

அண்டத்தின் அகலத்தை
அளந்து கட்டிய ஆழமான
நினைவுகள் ???

பல முகம் கொண்ட பிரச்சனைகள்
பட பட வென்று உதிரத்தின்
வேகத்தை உலுக்கிய
சிக்கலான சம்பவங்கள் !!

மகிழ்ச்சியின் மந்திரத்தை
மனதால் போதித்த நண்பர்கள்

நான்கு பக்கமும்
சுவர் எழுப்பி ,
அதன் நடுவே
என்னை நிறுத்தி ,
சுற்றமும் சுற்றி பார்த்து
சுட்டி காட்டி,
என்னவென்று ஆராய்வதற்குள்
கனலாய் கரைந்து போன
கற்பனை கனவுகள்

முதல் முறை கிடைத்த அன்பு தோழி
முதல்முறை கிடைத்த நட்பு பரிசு
முதல் முறை பேசிய தோழன்
முதல் முறை ஆடிய ஆட்டம்
முதல் முறை விளையாடிய பாட்டுக்கு பாட்டு
முதல் முறை ரசித்த தோழியின் பிரிவு
முதல் முறை சென்ற தோழியின் வீடு
முதல் முறை பார்த்து வியந்த பல திறன் கொண்ட நண்பன்
முதல் முறை வந்த தாமதமான வகுப்பறை
முதல் முறை கேக் வெட்டிய இனிப்பான நினைவு
முதல்முறை கண் கலங்க வைத்த ஆசிரியர்
முதல் முறை என்னை யாரென்று உணரவைத்த சொற்பொழிவு
முதல்முறை சென்ற திரையரங்கு
முதல் முறை எடுத்த போட்டோ
முதல் முறை உலகம் என்னவென்று உணர்த்த தருணம் ...........

இவையெல்லாம்
நினைத்து பார்க்க ???

இதழின் ஓரம் புன்னகை பூ பூக்க
விழியின் ஓரம் கண்ணீர் கரை புரண்டோட காத்திருக்கிறது

இந்த இறுதி நாளில்
என்னுள் இருந்த ஏக்கம்
ஒன்று நிறைவேறியது""

அலையோடு அலையாய்
அடித்து சென்று
எப்படியோ இன்று
கடைசியிருக்கையில்
அமர்ந்து விட்டேன்
அதன் சுவையை ருசித்து விட்டேன் ....

பேனாவின் மையில் பலம் மிருந்தாலும்
கண்ணிமையின் நுனியில் பல கனவிருந்தாலும்
அறியாமையில் பல முறை தோற்றிருந்தாலும்

நான் சென்று வந்த
இந்த பயணம்
ஒளியில் தேடும் இருளை விட
இருளில் தெரியும் வெளிச்சமே
வாழ்க்கையில் பல வலிகளை
போக்கும் வழி என்று

பசைபோட்டு பாசமாய்
அதன் சிந்தனைகளை
என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறது ...

இன்றைய நாள் மறக்க முடியாதது
மீண்டும் பிறக்க முடியாதது

இவை ,
என் கல்லூரி வகுப்பறையில் நான் எழுதும் கடைசி வரிகள்
வீரியமான இந்த விதைக்கு உயிர் கொடுத்த உயரிய உரங்கள்....!!!

எழுதியவர் : prisilla (30-Mar-17, 8:17 pm)
பார்வை : 608

மேலே