ஆறோடும் நீரோடும்
ஆறோடும் நீரோடும்
ஆடினோம்...பாடினோம்
அனைத்தும் நினைவுகளாகவே
சென்று விடுமோ என்ற ஏக்கம்..
ஆறையும் அடக்கி
அடிக்கல் நட்டு விட்டனர்
நீர் எங்கு செல்லும்...செல்ல இடமின்றி
எங்கு சென்றதோ...
நமக்கான இடத்தில்
நாம் வசிக்கிறோம்..அப்படி இருக்க
நீருக்கான இடம் ஆறு...குளம்...ஏரிதானே
அது அதன் இடம் தேடி...ஆவியாகி விட்டதோ...
ஆறோடும் நீரோடும்
நாம் ஆடிய ஆட்டங்கள்
ஏராளம்...ஏராளம்...அதை
பிள்ளைகளுடன் சொல்லதான் முடிகிறது
ஆறா அப்படி என்றால்?
என்று பிள்ளைகள் கேட்கும் கேள்வியாகி விட்டது..
ஆற்றில் அலசினோம்,கசக்கினோம்,
குடித்தோம்,குளித்தோம்...
சுத்தமாக..சுகாதாரமாகதான் இருந்தோம்...
அனைத்தும் மீண்டும் நடக்க...
தூர்வாரி மீட்டெடுப்போம்...
நம் ஆறையும் நீரையும்....