கானலான காதல்

நீரின் வழி நிலமறியது
என் உணர்வின் வலி
உன் நினைவறியது ?

கடலின் எழிலை ரசித்தேன் !
காற்றின் இசையை ரசித்தேன் !
மண்ணின் மணத்தை ரசித்தேன் !
மழலையின் மொழியை ரசித்தேன் !
வானின் வண்ணத்தை ரசித்தேன் !
வானவில்லின் வடிவத்தை ரசித்தேன் !
என்னை வடிவமைத்த அன்னையை ரசித்தேன் !
அன்னைக்கு பின் உன்னையே ரசித்தேன் !

உன் ஞபாகங்கள்
என் உடலில் கை ரேகையானது
உயிரில் உணர்வானது

ஒரு தடவை கூட
தோன்றவில்லையா உனக்கு ?
உன் நிழல் நான் தானென்று..

உன்னால் ,உலகம் அறிந்தேன்
சகஜமாய் பேசும் ஆற்றல் அடைந்தேன்
நாகரீகத்தோடு நகர பழகி கொண்டேன்
முகத்தில் நவரசமும் உணர்ந்தேன்
அகத்தில் அன்பைஉயிர் பித்தேன் ...

உன்னை மறக்க
என் மனதில் தயிரியும் இல்லை
நான்கு வால்வு கொண்ட இதயத்தில்
இடைவெளியும் இல்லை

உன் உள்ளம்
என்னை அறியாவினும்
உன் அருகில்
நானிருப்பேன்
கானல் நீரானாலும்..
கலைந்து விடாமல் !!!

எழுதியவர் : prisilla (2-Apr-17, 11:52 pm)
சேர்த்தது : Mariya
பார்வை : 102

மேலே