மெளனம்

மெளனம்......
அளப்பறிய ஆற்றலை
கருவிலே சுமக்கும் - ஓர் அணுவாய்!....

மெளனம்......
எண்ணிலா வினாக்களும்
ஏற்றிடும் ஒரே - ஓர் விடையாய்!...

மெளனம்......
அர்த்தங்கள் பல ஏந்தி
கிளைவிட்டு கொழுத்த - ஓர் அகராதியாய்!..

மெளனம்...
பேச இயலா இடந்தனிலும்
பேசிடும் - ஓர் சைகையாய்!...

மெளனம்......
எண்ண சஞ்சாரமற்ற மனம்
மீட்டிடும் - ஓர் இசை வரிசையாய்!...

மெளனம்......
வீரிடும் உணர்ச்சிகளுடன்
மூண்டிடும் - ஓர் பனிபோராய்!...

மெளனம்......
தடுமாறும் வார்த்தைதனை
தாங்கிப்பிடிக்கும் - ஓர் ஊன்று கோலாய்!...

மெளனம்......
நெடிய விவாதங்கள்
இடையே இளைப்பாறும் - ஓர் திண்ணையாய்!


மெளனம்......
அநீதியை தட்டிக்கேட்கும்
அஹிம்சையின் - ஓர் ஆயுதமாய்!...

மெளனம்......
அமைதிக்கு ரதம் ஓட்டிடும்
அழைப்பிலா - ஓர் சாரதியாய்!...

மெளனம்......
கோபத்தை சாம்பலாக்கும்
கணநேர - ஓர் வேள்வியாய்!...

மெளனம்......
நடுநிசிகள் பேசிக்கொள்ளும்
உலகின் - ஓர் பொது மொழியாய்!...

மெளனம்......
இரவின் மடியில்
கொஞ்சித் தவழும் - ஓர் ஊமைக் குழந்தையாய்!..

எழுதியவர் : சு உமாதேவி (3-Apr-17, 9:48 pm)
பார்வை : 886

மேலே