பெண் சிசு

தாயே !!!
பத்துமாசம் என்ன பத்திரமா பாத்துகிட்டே
பாரம் தாங்கினது போதுமுன்னா பாதியில இறக்கிவிட்ட
ஆணாக பிறந்திருந்த அனைவருக்கும் சந்தோசம்
யாரு செஞ்ச பாவமோனு எல்லோரும் சொல்லுமாறு பாவிமகள் நானோ பெண்ணாக பிறந்துப்புட்டேன்
வயலுக்கு சென்ற அப்பன் எனக்கு வாய்நெல் போட வந்தான்
வாரிச கொல்லாதன்னு நீயும் வாதாடி என்ன காத்த
ஊருச்சொல்லும் நீங்களையே, உறவு சொல்லும் தாங்களையே
உறவாக வந்த என்ன யாரும் உயிராக பாக்கலையே
பழிச்சொல் பல பேசி உன்ன பாதி மனசு மாற வச்சாங்களே
பாவிமகள் வேணாமுன்னு எனக்கு பால ஊத்த சொன்னாங்களே
பசியில நான் அழுக, பாசத்துல நீ அணைக்க
நீ வேஷந்தான் போடுறேன்னு இந்த வெகுளிக்குந்தான் தெரியலையே
கள்ளிப்பால் எனக்கு தந்து நீயும் கண்ணீர வடிச்சுப்புட்ட
கண்ணுறங்கும் நேரம்வரை என் கண்ணுரெண்டும் உன்னபாக்க
கண்மூடி தூங்கினது போதுமென கண்விழிக்க நானும் பார்த்தேன்
எழுந்திரிக்க முடியலையே, ஏனோ அது தெரியலையே
என் ஆசையும் தான் அடங்கி போச்சு ,வாழ்க்கையும் தான் முடிஞ்சு போச்சு
இந்த உலகில் பிறந்த நான் !
உயிரோடு இல்ல ஒருநாளு, உன்னோடு இல்ல இந்நாளு
மறுஜென்மம் ஒன்னு இருந்தா அப்போதும் நான் பிறக்கணும் மகளாக
உன்னோடு வாழனும் நிஜமான உயிராக !!!

எழுதியவர் : கோ.கபிலன் (4-Apr-17, 12:59 am)
Tanglish : pen sisu
பார்வை : 101

மேலே