விகற்பம்

தொட்டில் குழந்தைதனை தோள்வைத்துத் தாலாட்ட
மட்டில்லா ஆசையுள மாந்தரேங்க – கட்டில்
சுகத்தாலே கொண்ட கருகளைப்புச் செய்யும்
விகற்பமும் உள்ளது வே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Apr-17, 1:48 am)
பார்வை : 138

மேலே