காதல் கடல் முத்து

என் எண்ணலை
தேடி ஓடுதே
காதல் கடற்கரையை....

ஈரம் நிறைந்த நெஞ்சே
தினம் அழகாய்
வளைந்து நெளிந்து
பயணம் செய்யும்
என் ஜீவ நதியே...
எழில் இடையே...
நீ என்னிடம் வந்து சேர்வதெப்போ?

அன்பே நீதான்...
இங்கே விரைவாய்
எழுந்து வந்து
என் தாகம் தீர்ப்பாய்...
இன்பக்கடலில் கலந்து...
மழலை முத்தை பெற்றெடுப்பாய்...
என்னால் மூழ்காதிருந்து...!

எழுதியவர் : கிச்சாபாரதி (4-Apr-17, 8:36 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 418

மேலே